இறுதி ஓவரில் திரில்; அசத்திய தமிழக வீரர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அணியை 04 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி..!
Gujarat Titans Defeat Punjab Kings by 4 Wickets
19 வது ஐபிஎல் 2026 தொடரின் 46-வது லீக் ஆட்டம், நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 3) நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 04 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பம் முதலே பந்துவீச்சில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. குறிப்பாக, எப்போதும் அதிரடி காட்டும் ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர்.

பஞ்சாபி அணி சார்பில், சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 57 ரன்கள் (03 பவுண்டரிகள், 05 சிக்ஸர்கள்) குவித்து அணியை மீட்டெடுத்தார். அடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 ரன்கள் சேர்த்தார். எனினும், குஜராத் அணியின் ஜேசன் ஹோல்டர் அபாரமாகப் பந்துவீசி 04 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்த, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மாத்திர எடுத்தது.

அடுத்ததாக, 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில், சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இதில் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அரை சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு உதவினார். வாஷிங்டன் சுந்தர் கடைசிவரை ஆட்டமிழக்காது, அதிரடியாக 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திரில்லர் நிறைந்த இறுதி ஓவரில் வாஷிங்கடன் சுந்தர் அடித்த ஒரு சிக்ஸ் மூலம் குஜராத் அணி 19.5 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 04 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. போட்டியின் ஆட்டநாயகன் விருது ஹோல்டருக்கு கிடைத்தது.
English Summary
Gujarat Titans Defeat Punjab Kings by 4 Wickets