நாளை தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சென்னை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி..! - Seithipunal
Seithipunal


234 தொகுதிகளை கொண்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை (மே 4ஆம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இரு கூட்டணிகளும், நாதக மற்றும் தவெக ஆகியவை தனித்தும் போட்டியிடுகின்றன. இந்த நான்கு முனை போட்டியில் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி உள்ளது. 

இதில் திமுக நேரடியாக 164 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் திமுக சின்னத்தில் 12 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக நேரடியாக 167 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 05 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த சூழலில், கடந்த 29-ஆம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதன்படி, பெரும்பான்மையானவை திமுக கூட்டணிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், சில கருத்துக் கணிப்புகள் அதிமுகவுக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரே ஒரு கருத்துக் கணிப்பு மட்டும் தவெகவுக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளன.

இது இவ்வாறு இருக்க நாளை (மே 04-ஆம் தேதி) காலை 08 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கட்சியின் தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

With the Tamil Nadu election results set to be released tomorrow Edappadi Palaniswami has arrived in Chennai


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->