ஒரு சாதனையை சொல்லுங்கள் இப்போதே விலகிவிடுகிறோம் - பரபரப்பை கிளப்பிய சீமான்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ”10 ஆண்டு கால ஆட்சியில் தங்களது ஒரு சாதனையை பாஜக சொல்ல சொல்லுங்கள். நாங்கள் இப்போதே போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம். ஒரு நல்லது அவர்களால் சொல்ல முடியுமா? பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்துவிட்டு இனிமேல் புதிய இந்தியாவை உருவாக்க வாய்ப்பு வந்துவிட்டது என்கிறார் பிரதமர்.

பத்தாண்டுகள் காங்கிரஸ், பத்தாண்டுகள் பாஜக என என் வாழ்நாளில் பாதி கழிந்துவிட்டது. ஆனால், இந்த நாட்டில் என்ன நடந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி முடிந்தபிறகு வந்த மோடி, இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். சொன்னபடி கொடுத்தாரா இல்லையே. 15 லட்சம் தருவதாக சொன்னார். அதை அப்படியே மக்கள் நம்பிவிட்டனர். பிரதமர் மோடி ஒரு நல்ல தலைவர், நல்ல ஆட்சியாளர் என்றால் ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்.

பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுவிடுகிறோம். மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பிஎம்கேர்ஸ்க்கு எதிராக கேள்விகளை கேட்டார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை. எல்லோருக்கும் அவரவர்கள் சின்னத்தை கொடுக்கும்போது எனக்கு மட்டும் விவசாயி சின்னத்தை பறித்தார்கள். ஏனென்றால், பயம் தான் காரணம். நாங்கள் முன்வைக்கிற அரசியல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ntk leader seeman election campaighn in tirupur


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->