மழைநீர் தேக்கம், வெள்ளப் பாதிப்புகளுக்கு இனி வாட்ஸ்அப் மூலமே புகார் அளிக்கலாம்...! - சென்னை மாநகராட்சியின் புதிய வசதி
Now you can file complaints about rainwater stagnation and flood damage through WhatsApp Chennai Corporation new facility
சென்னையில் பெய்து வரும் மழையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வெள்ளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் விரைவாகப் புகார் தெரிவிக்கும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி வாட்ஸ்அப் வழியாகப் புகார்களைப் பதிவு செய்யும் வசதியை வழங்கியுள்ளது.
இதற்காக 9445061913 என்ற வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கும் மழைநீர், வெள்ளப் பாதிப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகத் தங்களது புகார்களை இந்த வசதியின் மூலம் எளிதாகத் தெரிவிக்க முடியும்.

முதலில், 9445061913 என்ற எண்ணை உங்கள் செல்பேசியில் சேமித்துக்கொள்ள வேண்டும். பின்னர், வாட்ஸ்அப்பைத் திறந்து அந்த எண்ணுக்குச் செய்தி அனுப்பி, அதில் வழங்கப்படும் சேவைகளில் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன்பிறகு, “மழை / வெள்ளக் குறை தீர்வு” என்ற சேவையைத் தேர்வு செய்து, உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்த புகாரைப் பதிவு செய்யலாம்.மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அலுவலகங்களுக்குச் நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே புகார் தெரிவிக்க இந்த வசதி உதவியாக இருக்கும்.
எனவே, சென்னையில் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளும் பொதுமக்கள், மாநகராட்சியின் இந்த வாட்ஸ்அப் வசதியைப் பயன்படுத்தித் தங்களது புகார்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
English Summary
Now you can file complaints about rainwater stagnation and flood damage through WhatsApp Chennai Corporation new facility