திருவள்ளூர் அருகே அதிரடி வேட்டை...! 3 கிலோ கஞ்சா மற்றும் 3,630 போதை மாத்திரைகளுடன் 2 இளைஞர்கள் கைது...! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த இரு இளைஞர்களைக் காவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் 3,630 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஜமிஸ்பாபு தலைமையிலான காவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவலர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர்.

இந்தச் சோதனையில், அவர்கள் தங்களுடன் 3 கிலோ கஞ்சா மற்றும் 3,630 போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் காவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவலர்களின் விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பழனி என்பதும், மற்றொருவர் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த மோனிஷ்குமார் என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த காவலர்கள், அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.மேலும், கைதான இருவருக்கும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய பிற நபர்கள் யார் என்பது குறித்தும், இந்தக் கடத்தலின் பின்னணியில் செயல்படும் கும்பல் குறித்தும் காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action hunt near Thiruvallur 2 youths arrested 3 kg ganja and 3630 narcotic pills


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->