தென்காசியில் சோகம்...! பெற்றோர் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாப பலி...! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் பெற்றோருடன் சென்ற 3 வயது குழந்தை, வாகனம் கவிழ்ந்ததில் சாலையில் தூக்கி வீசப்பட்டு லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராகப் பணியாற்றி வருகிறார்.

இவருக்குத் திருமணமாகி மனைவியும், அத்விக் (3) உள்ளிட்ட இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் பாலசுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அவர்கள் மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் அத்விக், சாலையின் மறுபுறத்தில் விழுந்துள்ளார். அப்போது தென்காசியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் குழந்தை சிக்கிக் கொண்டது.

இந்தக் கோர விபத்தில் பெற்றோரின் கண் முன்னே சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன், அவரது மனைவி மற்றும் மற்றொரு குழந்தை ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தங்களது கண் முன்னே மகன் உயிரிழந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து குறித்த தகவலறிந்த கடையநல்லூர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கடையநல்லூர் பகுதியில் இதேபோன்று நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து மேலும் இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அந்தச் சம்பவங்களில் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் நிலைதடுமாறிக் கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோருடன் மருத்துவமனைக்குச் சென்ற சிறுவன், எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy Tenkasi 3 year old child died tragically after being hit by a lorry in front of his parents


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->