உடுமலையில் பரபரப்பு...! வீட்டுக்குள் நுழைய முயன்ற முதலை...! ஆக்ரோஷமாக எதிர்த்துத் துரத்திய வளர்ப்பு நாய்கள்...! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, நள்ளிரவில் வீட்டின் வாசல் வரை ஊர்ந்து வந்த முதலையை, வளர்ப்பு நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைத்துத் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பாப்பான்குளம் பகுதியில் அமைந்துள்ள நொச்சிப்பள்ளம் ஓடையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அங்கு வசித்து வந்த முதலை ஒன்று நீரோட்டத்தில் அடித்துவரப்பட்டு குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த மரகதம் என்பவரது வீட்டின் வாசலை நோக்கி அந்த முதலை மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது.

அப்போது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் இரண்டு நாய்களும் முதலையின் நடமாட்டத்தைக் கண்டு சுதாரித்துக் கொண்டன. உடனடியாகச் சத்தமாகக் குரைத்தபடி முதலையை நோக்கிப் பாய்ந்த நாய்கள், அதை வீட்டின் அருகிலிருந்து விரட்ட முயன்றன.நாய்களின் இடைவிடாத குரைப்பையும் ஆக்ரோஷமான எதிர்ப்பையும் எதிர்கொள்ள முடியாமல், முதலை அங்கிருந்து மெதுவாகப் பின்வாங்கி மீண்டும் ஓடைப் பகுதியை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வீட்டிற்குள் முதலை நுழையவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது.இதற்கிடையே, நள்ளிரவு நேரத்தில் வீட்டின் வாசலில் முதலை ஊர்ந்து வருவதும், அதைக் கண்ட வளர்ப்பு நாய்கள் தொடர்ந்து குரைத்துத் துரத்துவதும் அங்கிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

மழை வெள்ளத்தால் முதலை குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த முதலையைக் கண்டறிந்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udumalai state panic crocodile tried enter house pet dogs aggressively fought back and chased it away


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->