மக்களின் பாதுகாப்பை வேடிக்கை பார்ப்பதற்கா வாக்களித்தார்கள்...? சாத்தான்குளம் கொடூரச் சம்பவத்தால் தவெக மீது வானதி சீனிவாசன் காட்டம் ...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவெக அரசு தவறி வருவதாகவும், அன்றாடம் நிகழும் கொலைச் சம்பவங்களும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகவும் பாஜக முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நடத்திய கொடூரத் தாக்குதலில், மூன்று குழந்தைகளின் தாய் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், சட்டம் ஒழுங்கைச் சீரமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சூழலே தொடர்ந்து நிலவுகிறது. நாள்தோறும் அரங்கேறும் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், மாநிலத்தின் பாதுகாப்பு நிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.ஆனால், தவெக அரசு தொடர்ந்து தாங்கள் புதியவர்கள் என்றும், நிர்வாகத்தைச் சீரமைக்கக் கூடுதல் கால அவகாசம் தேவை என்றும் கூறிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பது ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.மேடைகள் தோறும் தங்களைத் தூய்மையான சக்தி என்று முன்னிறுத்தி மக்களிடம் வாக்குகளைப் பெற்றவர்கள், அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்பட வேண்டும். மக்களைப் பாதுகாப்பதோடு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

ஆனால், மாநிலத்தில் தொடர்ந்து நிகழும் கொலைகளையும், பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற சூழலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதற்காகவா மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.தேர்தல் வாக்குறுதிகளையும் மேடைப் பேச்சுகளையும் தாண்டி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளைத் தவெக அரசு எப்போது மேற்கொள்ளப் போகிறது?

முதலூரில் நிகழ்ந்துள்ள இந்தக் கொடூரக் குற்றத்தில் தொடர்புடையவர்களைக் காவலர்கள் விரைந்து கைது செய்து, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did they vote to see safety people Vanathi Srinivasan lashes out at tvk over brutal incident Sathankulam


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->