16 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான காஞ்சிபுரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்..! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 04-ஆம் தேதி முதல் 26 -ஆம்தேதி வரை, 01 முதல் 07 வயதுக்கு உட்பட 16 குழந்தைகள் சந்தேகத்திற்கு இடமாக உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறித்த குழந்தைகள் சளி, காச்சல், இருமல் காரணமாக அவதி பெற்றவந்த நிலையில், குழந்தைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்படி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் பிறகு அவர்களுக்கு சீறுநீரகம் பிரச்சனை ஏற்பட்டு குழந்தைகள் பரிதமாக உயிரிழந்துள்ளன. இது குறித்து மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இருமல் குடித்ததன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் தயாரிக்கப்பட்ட இரும்பல் மருந்து தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 16 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இரும்பல் மருந்து தயாரிக்கப்பட்ட ஸ்ரீசன் ஃபர்மா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. குறித்த நோட்டிஸை காஞ்சிபுரம் மண்டல மருத்துவ கட்டுப்பாடு துறை ஆய்வாளர் மணிமேகலை ஒட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Notice issued to Kanchipuram Srisan Pharma Company for causing the deaths of 16 children


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->