சட்டமின்றி கட்டுமானம் வேண்டாம்..அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கடும் உத்தரவு!
No construction without a permit The Madurai High Court has issued a strict order to the authorities
சட்டவிரோத கட்டிடங்களை எதிர்த்து கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு, உத்தரவிட்டது. மேலும் அனுமதியின்றி கட்டுமானம் செய்தால் உரிய சட்டம் படி அகற்றப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
மதுரை ஐகோர்ட்டு, சட்டவிரோத கட்டிடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.
வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ், தனது கட்டிடத்திற்கு அனுமதி பெற விண்ணப்பித்துள்ள நிலையில், பேரூராட்சி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.அரசுப்பக்கம் விளக்கமளித்ததில், மனுதாரர் விதிமீறல் செய்துள்ளதும், நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காததும் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஸ்ரீமதி, முக்கியமான ஐகோர்ட்டு தீர்ப்பை வழங்கினர்.நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள்:சட்டவிரோத கட்டிடங்கள் ஊக்குவிக்கப்படக்கூடாது என்பதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

கட்டிடம் கட்டுவதற்கு முன்பு அனுமதி பெறுவது கட்டாயம்.அதிகாரிகள், முறையான கட்டுமானம் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் தடிக்கவேண்டும்.தமிழ்நாடு நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம், 1971:பிரிவு 54 – விதிமீறல் கட்டுமான அனுமதி ரத்துபிரிவு 56 – அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை இடிக்கும் அதிகாரம்,முடிவில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது; அதே நேரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கையில் தொடரலாம் என்றும் கூறப்பட்டது.
English Summary
No construction without a permit The Madurai High Court has issued a strict order to the authorities