திமுக நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
No confidence motion against the DMK city council leader DMK and AIADMK members submitted a petition to the district collector
திமுக நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியரிடம் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் 18 திமுக நகர மன்ற உறுப்பினர்கள், 6 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் இணைந்து நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
கடந்த சில மாதங்களாகவே நகர்மன்ற தலைவருக்கும், நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றுவதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் ஒற்றுமை இல்லாததால் பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்மன்ற கூட்டம் நடைபெறும் பொழுது எதிர்ப்பில் உள்ள 18 திராவிட முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அதிமுக, திமுகவை சேர்ந்த 24 நகரமன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதற்குரிய மனுவை நகரமன்ற ஆணையாளரிடம் அளித்தனர். தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திமுக மற்றும் அதிமுக சார்பில் தனித்தனியே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
மனு அளிக்கும் பொழுது 18 திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களும், 6 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர் மன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக மனு அளித்தனர்.
English Summary
No confidence motion against the DMK city council leader DMK and AIADMK members submitted a petition to the district collector