வருமான வரித்துறை வழக்கு : அமைச்சர் பொன்முடி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில், தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு ரூ .60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டது. 

இதையடுத்து, அந்த குறிப்புகளின் அடிப்படையில், வருமான வரித்துறை அமைச்சர் பொன்முடிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், இந்த கடிதத்தை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், " எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் பொன்முடி பணம் பெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை" என்றுத் தெரிவித்தார். 

இதை குறிப்பெடுத்துக்கொண்ட நீதிபதி, அமைச்சர் பொன்முடியின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, கடிதத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டஆர். மேலும், இந்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி மாதம் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no action be taken against on minister ponmudi to income tax case chennai highcourt order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->