என்எல்சி விவகாரம் | மாநிலங்களவையில் அதிமுக எம்பி சிவி சண்முகம் நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


என்எல்சி விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க அதிமுக உறுப்பினர் சிவி சண்முகம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எதிரான என்எல்சி விரிவாக்க பணி குறித்து விவாதிக்க, சிவி சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் என்எல்சி நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், அடுத்த மாதம் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்களை ஜே.சி.பி. உள்ளிட்ட இயந்திரங்களை இறக்கி, பயிர்களை நாசமாக்கி கால்வாய் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது என்எல்சி நிர்வாகம்.

நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு விவசாயிகளும், மக்களும், பாமகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நெய்வேலியில் இன்று பா.ம.க. தரப்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடக்க உள்ளது.

இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட  10 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கால்வாய் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC Issue ADMK MP CV Shanmugam Notice issue in Parliament


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->