புத்தாண்டு கொண்டாட்டம் : விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் .! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் புத்தாண்டை மிகவும் பாதுகாப்பாக கொண்டாடுவதற்காக சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

சென்னையில் உள்ள மெரினா கடற்கரைகளின் மணற்பரப்பில் நேற்று இரவு எட்டு மணிக்கு மேல் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவ்வாறு தடையை மீறி கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று இரவு முதல் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்து 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine hundard thirty two vechicles seized for new year celebration


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->