பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய நாடக திருமணம்.. வெளியான பரபரப்பு தகவல்..! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் வைரலாகிய பள்ளி மாணவி நாடக காதல் நாடக திருமணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சமூக வலைத்தளத்தில் பள்ளி மாணவிக்கு வாலிபர் கோவிலின் பின்புறத்தில் உள்ள முட்டுசந்திற்குள் வைத்து மஞ்சள் தாலி கட்டுவது தொடர்பான வீடியோ வெளியாகி இருந்தது. இந்த விடியோவை கண்ட நீலகிரி மக்கள், இந்த கோவில் எங்களின் பகுதியில் உள்ளது என்றும், மாணவி அணிந்திருந்த சீருடை இங்குள்ள பள்ளியில் உள்ளது என்றும் தெரிவித்து குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், குறித்த மாணவி கடந்த வருடத்தில் பத்தாம் வகுப்பு படித்தார் என்பதும், தற்போது அவர் பள்ளிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவிக்கு தாலிகட்டிய நாடககாதோலன் தொடர்பாக விசாரணை செய்கையில், அவன் குன்னூர் கொலைக்கம்பை பகுதியில் உள்ள கிளிஞ்சிடா பகுதியை சார்ந்த கிறிஸ்டோபர் (வயது 23) என்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, நாடககாதலனை கைது செய்து விசாரணை செய்கையில், " பள்ளி மாணவியை நான் காதல் வலையில் வீழ்த்தினேன். எனது வலையில் விழுந்த மாணவியும் என்னை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் உடனடியாக திருமணம் செய்யலாம் என்று கூறிய எனது வார்த்தையை நம்பி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். 

இதனை எனது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி நல்லநாள் மற்றும் நல்லநேரம் பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது கோவிலில் மற்றொரு நிகழ்ச்சி நடப்பது எங்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து மாணவியை சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதுபோல புறப்பட்டு வரச்சொல்லி கோவிலுக்கு அழைத்து சென்றேன். அங்கு மங்கள இசை கோவிலுக்குள் முழங்க, நான் கோவிலின் பின்புறம் உள்ள மறைவு சந்துப்பகுதியில் வைத்து மாணவிக்கு மஞ்சள் கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்த மஞ்சளை வைத்து தாலிகட்டிட்டேன். 

மாணவி பின்னர் வீட்டிற்கு சென்று அலைபாயுதே பாணியில் வீட்டில் சமாளித்து வந்த நிலையில், மாணவியின் நடவடிக்கையில் உள்ள சந்தேகத்தை கவனித்த பெற்றோர் அவளின் கழுத்தில் மஞ்சள் தாலி இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மாணவியை திருச்செங்கோட்டுக்கு அழைத்து சென்றுவிட்ட நிலையில், அவர்கள் அங்கு சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது. 

கடந்த வருடம் எடுத்த வீடியோ காட்சியை எனது நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிட்டனர். இதனால் நான் சிக்கிக்கொண்டேன் " என்று தெரிவித்துள்ளான். குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கிறிஸ்டோபரை சிறையில் அடைத்தனர். மேலும், மாணவியை கண்டறிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளிப்பருவ காதலில் விழுந்து, காதலனுக்கு கழுத்தை நீட்டி எதிர்கால வாழ்க்கையை இழந்துள்ளது அந்த பெண்ணின் சாபக்கேடா?. இல்லை பள்ளிப்பருவ காதல்களை ஊக்குவிக்கும் வகையில் வெளியாகும் திரைப்படங்களா?. நாடக காதல்களை ஆதரிக்கும் கும்பல்களின் கொட்டம் அதிகரித்தது எதனால்?.. பல சாதனைகளை பெண்கள் படைத்தது வரும் காலத்திலும் வீட்டில் அடைக்கப்படுவதாக புரட்சி பேசுபவர்கள், நாடக காதல் கும்பல்கள் குறித்து தோலுரித்து பேச பயம் கொள்வது ஏன்? என்ற கேள்விகள் அனைத்தையும் மக்களின் பார்வைக்கே விட்டுவிடலாம்.,

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Social Media Trending about Child School Student Marriage Video Culprit Drama Lover Arrest


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal