நீலகிரியில் பெரும் சோகம்.!! சிறுத்தை தாக்கிய பெண் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சரிதா என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியதில் படுக்கையமைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளிபகுதியில் மேலும் 3 பேரை சிறுத்தை தாக்கியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்தும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் சிறுத்தையை பிடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


இந்நிலையில் சிறுத்தை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரிதா இன்று உயிரிழந்தார். சரிதாவின் உயிரிழப்பு உறவினர்கள் மத்தியிலும் ஊர் மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பத்து நாள்கள் மேலாகியும் அப்பகுதியில் உலாவி வரும் சிறுத்தை பிடிபடாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் விரைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nilagiri woman died after being attacked by a leopard


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->