எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்கல! நான்கே மாதங்களில்.. புதுமண தம்பதிகள் எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் மேம்பாடு பகுதியைச் சேர்ந்த சரவணன் தனது பெற்றோர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியில் வசித்து வரும் நிலையில் ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதாகும் காயத்ரி என்பவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காயத்ரி சிறுசேரி பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

காயத்ரியின்  பெற்றோர்கள் சென்னை அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே வசித்து வரும் நிலையில் சரவணனுக்கும்  காயத்ரிக்கும் திருமணமானவுடன் பெருங்களத்தூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனி குடித்தனம் வைத்துள்ளனர். வழக்கமாக சரணனன்  2 மணிக்கு வீடு திரும்பிய போது அவர்களுடைய அறையில் காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் அதே அறையில் தானும் தூக்கிகிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பீர்க்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்த சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடைய அறையில் போலீசார் நடத்திய சோதனையின் போது காயத்ரி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் எவ்வளவு சொன்னாலும் புரிந்து கொள்ளாததால் இந்த விபரீதம் முடிவை எடுத்ததாக காயத்ரி குறிப்பிட்டிருந்தது காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருமணமாகி நான்கே மாதங்களுக்குள் புதுமண தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் தாம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. புதுமண தம்பதிகள் நான்கே மாதங்களை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newly married couple commits suicide in Perungalathur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->