பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பிடும் முகாம்கள் குறிப்பிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்படும். பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த பட்டதாரி ஆசிரியர்களும் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் ஈடுபடுவார்கள். இந்த பணியின் போது ஆசிரியர்கள் சிலர் விடைத்தெழுத்து முகாம்களில் இருந்து ஆசிரியர் சங்கங்களுக்கான சந்தா வசூலிப்பது சங்க ஆலோசனைக் கூட்டம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழந்துள்ளது.

அதேபோன்று பணி நேரத்தின்போது டீ குடிக்க வெளியேறுவது விடைபெறுத்து முகாம்களை விட்டு வெளியே சென்று காலம் தாழ்த்தி வருவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கிடைத்தால் மதிப்பீட்டில் கவனம் சிறகுகள் ஏற்பட்டு விடைத்தாள்கள் அதிகமாகவும் குறைவாகவும் மதிப்பெண்கள் பதிவிடுவதும் மொத்த மதிப்பெண் கூட்டி பதிவிடுவதில் தவறு ஏற்படும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இதனை முடிவுக்கு கொண்டு வர நடப்பு கல்வி ஆண்டில் விடை திருத்தும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர அரசு தேர்வு துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி மாவட்ட கல்வி அதிகாரிக்கு பதில் அவர்களுக்கு உயரதிகாராக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளை முகாம் பொறுப்பாளராகவும் கண்காணிப்பாளர் கண்காணிப்பாளராகவும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இடைக்கால் திருத்தும் பணியின் போது முகாம்களை விட்டு வெளியேறி சங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் திருத்திய விடை தாள்களை தேர்வு முடிவுக்கு முன்பு மறு ஆய்வு செய்து தவறு கண்டறியப்பட்டால் உரிய மதிப்பெண் வழங்குவதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New rules for general exam paper correction teachers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->