புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்து வரும்‌ கொரோனா நோய்ப்‌ பரவலைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, நோய்ப்‌ பரவலைத்‌ தடுக்க மத்திய அரசின்‌ உள்‌ துறை அமைச்சகம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌ மறறும்‌ குடும்பல நலத்துறை அமைச்சகம்‌ பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில்‌ கொண்டும்‌, தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌, 06.05.2021 (இன்று) காலை 4.00 மணி முதல்‌ 20.05.2021 காலை 4.00 மணி வரை பின்வரும்‌ புதிய கட்டுப்பாடுகள்‌ விதிக்கப்படுகின்றன.

அனுமதிக்கப்பட்டவை :

இரவு நேர ஊரடங்கு :

அவசர மருத்துவத்‌ தேவைகளுக்கும்‌, விமானநிலையம்‌ / இரயில்நிலையம்‌ செல்ல மட்டும்‌ வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும்‌ தனியார்‌ வாகன உபயோகம்‌ அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, அத்தியாவசியப்‌ பணிகளான பால்‌ விநியோகம்‌, தினசரி பத்திரிக்கை விநியோகம்‌, மருத்துவமனைகள்‌, மருத்துவ பரிசோதனைக்‌ கூடங்கள்‌, மருந்தகங்கள்‌, ஆம்புலன்ஸ்‌ மற்றும்‌ அமரா ஊாதி சேவைகள்‌ போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்‌, சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ எரிபொருள்‌ வாகனங்கள்‌, இரவு நேர ஊரடங்கின்‌ போது அனுமதிக்கப்படும்‌.

ஊடகம்‌ மற்றும்‌ பத்திரிகைத்‌ துறையினர்‌ தொடாந்து இரவிலும்‌
செயல்படலாம்‌.

பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ பங்குகள்‌ தொடாந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அரசு ஆணை எண்‌.348, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை, நாள்‌ 20.4.2021-ல்‌ பட்டியலிடப்பட்டுள்ள, தடையின்றி தொடாந்து செயல்பட வேண்டிய தொடர்‌ செயல்முறை தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌
தயாரிக்கும்‌ தொழிற்சாலைகள்‌ இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும்‌, இந்நிறுவனங்களில்‌ இரவு நேரப்‌ பணிக்கு செல்லும்‌ பணியாளர்களும்‌, தனியார்‌ நிறுவனங்களின்‌ இரவு காவல்‌ பணிபுரிபவர்களும்‌, தொடர்புடைய நிறுவனங்களால்‌ வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம்‌ வைத்திருப்பின்‌, வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த செயல்பாடுகள்‌, தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்களில்‌, இரவு நேரப்‌ பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

தரவுமையங்களில்‌ பராமரிப்பு பணி, மருத்துவம்‌, நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும்‌ இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல்‌ தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள்‌ மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

கிடங்குகளில்‌, சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும்‌ சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள்‌ மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌. இரவு நேர ஊரடங்கின்‌ போதும்‌, ஞாயிற்றுக்கிழமைகளில்‌ அமலில்‌ இருக்கும்‌ முழு ஊரடங்கின்‌ போதும்‌, துறைமுகங்களிலும்‌, விமான நிலையங்களிலும்‌, சரக்கு போக்குவரத்திறகும்‌, தொழிலாளர்கள்‌ சென்று வரவும்‌ அனுமதிக்கப்படும்‌.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு :

அத்தியாவசியப்‌ பணிகளான பால்‌ விநியோகம்‌, தினசரி பத்திரிகை விநியோகம்‌, மருத்துவமனைகள்‌, மருத்துவ பரிசோதனைக்‌ கூடங்கள்‌, மருந்தகங்கள்‌, ஆம்புலன்ஸ்‌ மற்றும்‌ அமரர்‌ ஊர்தி சேவைகள்‌, போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்‌, அனைத்து சரக்கு வாகனங்கள்‌, விவசாயிகளின்‌ விளை பொருட்களை எடுத்துச்‌ செல்லும்‌ வாகனங்கள்‌, எரிபொருளை எடுத்துச்செல்லும்‌ வாகனங்கள்‌ ஆகியவை முழு ஊரடங்கின்‌ போது அனுமதிக்கப்படும்‌.

முழு ஊரடங்கு அமலில்‌ உள்ள நாட்களில்‌, உணவகங்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ 10.00 மணி வரையிலும்‌, நண்பகல்‌ 12.00 மணி முதல்‌ மதியம்‌ 3.00 மணி வரையிலும்‌, மாலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரையிலும்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zamato போன்ற மின்‌ வணிகம்‌ மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ நிறுவனங்கள்‌ மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

மற்ற மின்‌ வணிக நிறுவனங்களின்‌ வேவைகளுக்கு ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ அனுமதி இல்லை.

ஊரடகம் மறறும்‌ பத்திரிகைத்‌ துறையினர்‌ தொடர்ந்து பணியாற்றலாம்‌.

அரசு ஆணை எண்‌.348, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை, நாள்‌ 20.4.2021-ல்‌ பட்டியலிடப்பட்டுள்ள, தடையின்றி தொடாந்து செயல்பட வேண்டிய தொடர்‌ செயல்முறை தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலைகள்‌ செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலில்‌ உள்ள நாட்கள்‌ உட்பட அனைத்து நாட்களிலும்‌, திருமணம்‌/ திருமணம்‌ சார்ந்த நிகழ்வுகள்‌ (கலந்து கொள்வோர்‌ எண்ணிக்கை 50 நபாகளுக்கு மிகாமல்‌) மற்றும்‌ இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர்‌ எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்‌) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன்‌ நடத்துவதற்கும்‌ அதில்‌ கலந்துகொள்வதற்கும்‌ எந்தவிதமான தடையுமில்லை.

தொலைத்தொடர்பு மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த செயல்பாடுகள்‌, தகவல்‌ தொழில்நுட்பம்‌ மற்றும்‌ தகவல்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த சேவை நிறுவனங்களில்‌, இரவு நேரப்‌ பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

 தரவுமையங்களில்‌ பராமரிப்பு பணி, மருத்துவம்‌, நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும்‌ இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல்‌ தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள்‌ மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

கிடங்குகளில்‌, சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும்‌ சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள்‌ மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌. ஞாயிறறுக்கிழமைகளில்‌ முழு ஊரடங்கின்‌ போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில்‌ நிறுவனங்களில்‌, தீ, இயந்திரம்‌ மற்றும்‌ தொழிலாளர்கள்‌ பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new lockdown restrictions in tamilnadu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->