விநாயகர் சிலை விற்பனை செய்ய தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர், கடந்த 20 ஆண்டுகளாக பாளையங்கோட்டை வசித்து வருவதாகவும், களிமண் மற்றும் கலர் பவுடர் மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

விநாயகர் சதுர்த்திக்காக சுமார் பன்னிரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி,  நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளை செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் அதனை விற்பனை செய்ய விடாமல், போலீசார் தடை விதித்து, தன்னுடைய தொழில் கூடத்திற்கு சீல் வைத்ததாக முறையிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், சிலைகளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது. அதே சமயத்தில் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனை எதிர்த்து நெல்லை மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் இன்று திறப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பிளாஸ்டிக் ஆஃப் பாரீஸ் கலக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், நீதிபதிகளின் அந்த தீர்ப்பில் ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கலப்பதால் புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுவதாகவும், விஷம் என்பதில் ஒரு துளி விஷம் அதிகம் என்பதெல்லாம் இல்லை. எல்லாமே விஷம் தான் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Vinayagar Statue Issue Chennai HC order


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->