நெல்லை மேயர் விவகாரம் | ஊரைவிட்டு ஓடி தலைமறைவான திமுக கவுன்சிலர்கள்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம் சரவணனுக்கு எதிராக, 38 திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், கவுன்சிலர்கள் விட்டு ஓடி தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகள் உள்ளது. இதில் 44 வார்டுகளில் திமுக கவுன்சிலர்களும், திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் 7 வார்டுகளிலும் கவுன்சிலராக உள்ளனர்.

திமுக கவுன்சிலர்களில் சுமார் 40 பேர் அக்கட்சியின் முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளனர். இவருக்கு ஆதரவாக மேலும் சில எம்எல்ஏ.,க்களும் உள்ளனர்.

இந்த நிலையில், நெல்லை மேயர் சரவணனுக்கும், அப்துல் வகாபுக்கும் இடையே மோதல் வெடித்த, அதனால் 38 திமுக கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

உச்சகட்டமாக மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த திமுக கவுன்சிலர்கள், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் கடந்த மாதம் கடிதம் கொடுத்தனர். 

இந்த நிலையில், நெல்லை மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. 

இந்த விவகாரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்று கவுன்சிலர்களைகேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

அதன்படி, இன்றே நெல்லையில் இருந்து திமுக கவுன்சிலர்கள் பலரும் பாளையங்கோட்டை எம்எல்ஏ மற்றும் நெல்லை மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன்கான் தலைமையில் வெளியூர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக நாளை நடக்கவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Mayor saravanan Issue DMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->