அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்! மழையால் மண் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி மரணம்!
Neighbors in shock Elderly woman dies after mud wall collapses due to rain
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்த 98 வயதான கேசம்மாள் என்பவர், மண் சுவரால் ஆன ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர்.இந்த நிலையில், நேற்று மாலை உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டரா பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது.

அதன் பிறகு இரவு கனத்த இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசித்தொடங்கியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே, இரவு 12 மணியளவில் வீட்டில் அமைதியாக தூக்கி கொண்டிருந்த மூதாட்டி கேசம்மாள் மீது வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அங்கு சுவர் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
இதில் மூதாட்டி கேசம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.மேலும் இது குறித்து உளுந்தூர்பேட்டை காவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவயிடத்திற்கு வந்த காவலர்கள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்,உளுந்தூர்பேட்டையில் மழைக்கு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Neighbors in shock Elderly woman dies after mud wall collapses due to rain