குரூப் 2வில் மைனஸ் மதிப்பெண்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குரூப் - 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்காக வருகின்ற 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் முதல் நிலை தகுதித்தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வுகளில் இந்த ஆண்டு மைனஸ் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 

அதில் மாணவர்கள் தங்களுக்கான விவரங்கள் உள்ளடக்கிய பிரத்தியோக விடைத்தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் தவறு இருந்தால் உபயோகப்படுத்த முன்னரே மாற்றிக்கொள்ள வேண்டும். வேறு விடைத்தாளை பெற்று அதில் தங்களது பதிவு எண்ணை தவறாக குறிப்பிட்டு இருந்தால், மொத்த மதிப்பெண்ணில் 2 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

மேலும் வினாத் தொகுப்பு புத்தகத்தின் பதிவு எண்ணை விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும், எண்ணை தவறாகவும் குறிப்பிட்டிருந்தால் 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

தேர்வர்கள் ஷேடிங் செய்யும் முறையை முறையாக பின்பற்றவில்லை என்றால் 2 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

வினாவிற்கான விடை குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக இருந்தால் 2 மதிப்பெண்கள் கழிக்கப்படும். இதனையடுத்து தேர்வர்கள் வினாத்தாளை முறையாக கையாள வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Negative marks in group two exam


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->