பால் வடியும் வேப்பமரம்.. பூஜை செய்து வணங்கும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


எட்டயபுரம் அருகே பால் வடிந்த வேப்பமரத்திற்கு கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வேப்ப மரத்தில் கடந்த 3 நாட்களாக பால் போன்ற திரவம் வெளியேறி வந்திருக்கிறது.

இதனை அப்பகுதியாக சென்ற கிராம பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆர்வத்துடன் பார்த்துள்ளனர். மேலும் வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை கண்ட பொதுமக்கள் இது கடவுளின் ஆசி என நம்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பால் வடிந்த வேப்ப மரத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி பொட்டு வைத்து, ஆராதனை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தற்போது பால்வடைந்த வேப்ப மரத்திற்கு பூஜை செய்யும் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Neem tree with milk people worshiping in tuticorin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->