விபத்தில் சிக்கிய குழந்தையை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய சென்னை பெண்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் மகன் நிஷாந்த். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வேலூர் ஆர் என் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, நேற்று மாலை மீண்டும் காஞ்சிபுரத்திற்கு இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். 

இதையடுத்து, இவர்கள் இருவரும் சத்துவாச்சாரி வசூரில் உள்ள அம்மன் கோவில் எதிரே சென்றபோது பின்னால் வந்த இருசக்கரவாகனம் சரவணன் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணன் மற்றும் நிஷாந்த் இருவரும் படுகாயம் அடைந்தனர். அதேபோன்று பின்னால் மோதிய வாகனத்தில் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 

இதற்கிடையே, அந்த வழியாக சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கீதா மற்றும் அவரது மகனும் காரில் சென்னை நோக்கி வந்தனர். அப்போது இந்த விபத்தை பார்த்த உடனே அவர்கள் இருவரும் காரை நிறுத்திவிட்டு ஓடி வந்து, விபத்தில் சிக்கிய நான்கு வயது குழந்தையை மீட்டு காலதாமதம் இல்லாமல் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

அதேசமயம், அந்த வழியாக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். 

இதில், குழந்தையை கீதா தனது தோளில் சுமந்தபடி வேகமாக தூக்கிக்கொண்டு ஓடி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். இவையனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக்கு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது, இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

இதையடுத்து, விபத்தில் காயமடைந்த குழந்தையை தன்னுடைய குழந்தை போன்று நினைத்து மருத்துவமனையில் அனுமதித்த கீதாவை, டிஐஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near vellore bike accident two peples injury


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->