பரபரப்பு வீடியோ : திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துச் சென்று பல்லை பிடுங்கிய போலீசாரின் கொடூரச் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை பகுதியில் உள்ள காவல் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  

இதற்கு இடையே சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங்கிடம் தொலைபேசியில், பற்களை பிடுங்கியது தொடர்பாக விளக்கம் கேட்ட உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirunelveli investigation and tortured by extraction teeth in police station


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->