திட்டக்குடி தொகுதியில் 2 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


நேற்று திட்டக்குடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தொழுதூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டார். அப்போது பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கினார். 

இவ்விழாவில், 149 பேருக்கு வீட்டு மனை பட்டாவும், 448 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள், 188 நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள், 40 பேருக்கு வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பிலும், சுகாதாரத்தை சார்பிலும் நிவாரண உதவிகள் என்று மொத்தம் 1066 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மேலும், இந்நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் கற்பகம், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரீ கிருஷ்ணன், விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி, திட்டக்குடி சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுருநாதன்,  உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near thittakudi minister cv ganesan 2 crores Welfare assistance


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->