சிவகங்கை | விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்! கர்ப்பிணி பெண், சிசு பலியான கொடூரம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையாங்குடி அருகே நெஞ்சத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரின் மனைவி நிவேதா. கர்ப்பிணியான இவருக்கு  இன்று அதிகாலை 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. 

அதன் பின்னர் நிவேதா 108 ஆம்புலன்சில், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் உடன் அவரது தாய் விஜயலட்சுமி சென்றார். செங்குளம் பகுதி அருகே ஆம்புலன்ஸ் சென்ற போது, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில், கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களோடு ஆம்புலன்ஸில் இருந்த டிரைவர் மலையரசன் மற்றும் பணியாளர் திருச்செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த கர்பிணி பெண் மற்றும் அவரது தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near sivakangai ambulance accident pregnent lady died


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->