மனைவியின் மீது உள்ள கோபம்.! மகளைக் கொன்ற தந்தை.! அதிர்ச்சியில் மனைவி..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் ஒரு டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தன்ஷிகா என்ற எட்டு வயது மகள் இருந்தார். தன்ஷிகா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் வேலைக்கு சென்றால் இரவில்தான் வீடு திரும்புவார்.

இதன் காரணமாக இவரின் நடத்தை மீது காளிமுத்துவிற்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனால் தனது மகள் தன்ஷிகா தனக்கு பிறக்கவில்லை என்று தெரிவித்து பிரியதர்சினியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதையடுத்து, கடந்த 3-ந்தேதி காளிமுத்து சிவகங்கையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு தன்ஷிகாவை அழைத்து சென்றார்.

சில நாட்கள் ஆகியும் மகளை அழைத்து வரவில்லை. இதற்கிடையே பிரியதர்ஷினி வீட்டில் தனியாக இருந்ததால் இவர் மேலூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று தங்கி இருந்தார். இவருடன் காளிமுத்துவும் வந்து தங்கியிருந்தார்.

பிரியதர்ஷினி அவரிடம் மகள் எங்கே? என்று கேட்டபோது, தன் அக்கா வீட்டில் பத்திரமாக இருக்கிறாள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.   ஆனால் காளிமுத்து தன்ஷிகாவை தனது அக்கா வீட்டில் இருந்து ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

பிரியதர்ஷினியின் மீது உள்ள கோபத்தினால் மகள் தன்ஷிகாவின்  கழுத்தை நெரித்து கொலை செய்து, ஒரு வாளியில் வைத்து மூடி பரணில் வைத்துள்ளார். மகளின் பிணம் வீட்டில் இருப்பது தெரியாமல் பிரியதர்ஷினி தங்கியுள்ளார்.

இதையடுத்து, அக்கா வீட்டில் தங்கியிருந்த பிரியதர்ஷினியும், காளிமுத்து தனது வீட்டிற்கு செல்ல புறப்பட்டனர். அப்போது திடீரென பாதி வழியில் இறங்கிய காளிமுத்து தனது அக்காவீட்டிற்கு  செல்வதாக தெரிவித்தார். அதன்பிறகு ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள வீட்டிற்கு பிரியதர்ஷினி வந்தார்.  

அப்போது பிரியதர்சினியிடம் அந்த பகுதியில் வசிப்பவர்கள் உங்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருகிறது. என்னவென்று பாருங்கள் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரியதர்ஷினி வீடு முழுவதும் பார்த்தபோது, பரணில் இருந்த ஒரு சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவது தெரியவந்தது. அந்த சாக்குமூட்டையை எடுத்து பார்த்தபோது ஒரு பிளாஸ்டிக் வாளி மூடப்பட்டு இருந்த நிலையில் இருந்தது. 

அதில் ஒரு பகுதியை எலி கடித்து துளையிட்டு இருந்தது.  அந்த வாளியை திறந்து பார்த்தபோது தனது மகள் தன்ஷிகா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், உடல் அழுகி பிணமாக இருப்பது கண்டு பிரியதர்ஷினி அதிர்ச்சி அடைந்தார். 

அதன் பின்னர் கணவர்தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என்று நினைத்த அவர், இதுபற்றி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை. கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிறுமியின் தந்தை காளிமுத்துவை தேடி வருகின்றனர். 

தந்தையே மகளைக் கொன்ற கொடூர சம்பவம் மதுரை மாநகர மகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காளிமுத்து கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near madurai father kill daughter


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->