துன்புறுத்தலில் இருந்து மக்களை நீதித்துறை தான் பாதுகாக்க வேண்டும் - மம்தா பானர்ஜி.!
near kolkatta college function mamtha banarji
இன்று கொல்கத்தா மாநிலத்தில் உள்ள தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி யு.யு.லலித், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்துக் கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், நாட்டில் ஜனாதிபதி ஆட்சிக்கு வழிவகுக்கும்.
சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுகிறது. எனவே துன்புறுத்தலில் இருந்து மக்களை நீதித்துறை தான் பாதுகாக்க வேண்டும்.
ஜனநாயகம் எங்கே போய் விட்டது? தயவு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். நீதிபதி யு.யு. லலித்தை நான் வாழ்த்த வேண்டும். இரண்டு மாதங்களில், நீதித்துறை என்றால் என்ன என்பதை அவர் காட்டியுள்ளார்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
English Summary
near kolkatta college function mamtha banarji