காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்.! போலீசில் தஞ்சமடைந்த ஜோடி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். சகோதரர் பராமரிப்பில் இருந்து வரும் இவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு  அருகே உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வருகிறார். 

இந்நிலையில், இவருக்கும், அதேபகுதியில் தனியார் மருத்துவமனையில் செவிலியவராக வேலை பார்க்கும் தாரணிதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்குமிடையே காதலாக மாறியது.

நாளடைவில் இந்த விபரம் அவரது பெற்றோருக்கு தெரியவர அவர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வீட்டைவிட்டு இருவரும் வெளியேறிய  பழனியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட பின்னர் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 

இதற்கிடையே தாரணிதேவியின் பெற்றோர் தனது மகள் மாயமானதாக எரியோடு போலீசில் புகார் அளித்திருந்தார். எனவே மகளிர் காவல் நிலையத்திலிருந்து இருவரையும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எரியோடு துணை தலைமை காவலர் பழனிச்சாமி இருதரப்பு நபர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கார்த்திக்குமாரின் சகோதரர் அவர்களை ஏற்றுக்கொண்டதால் அவருடன் அனுப்பி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal love couples escaped in home


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->