கடலூர் : கரூர் நிறுவனத்திற்கு கமிஷன் தராத மதுபானக் கடைகள் மூடல்.!
near cuddlaore tasmac shops closed
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளில் கரூரைச் சேர்ந்த சில திமுகவினர் விற்பனை அடைப்படையில் பாட்டிலுக்கு, 2 முதல் 5 ரூபாய் வரை கமிஷன் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதற்கு கடையின் விற்பனையாளர்கள் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதன் படி விற்பனையாளர்கள் கடையை மூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள மதுபிரியர்கள் கடையைத் திறக்க கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கடையின் விற்பனையாளர், ஆளும் கட்சியினர் கமிஷன் கேட்டு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கடை 6 நாட்களாக மூடப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கரூர் நிறுவனத்திற்கு கமிஷன் தராத மதுக் கடைகள் மூடப்படும் என்றும், கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தொலைதூரங்களுக்கு மாற்றப்படுவர் என்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், வசூல் செய்து தராமல் ஊழியர்கள் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கமிஷன் தராமல் இருக்கும் கடைகளை மூடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதில், முதல் கட்டமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கடலூர் மாவட்ட மேலாளர் உத்தரவின் படி, வேப்பூர் வட்டத்தில், "பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால்" ஒரு கடை மூடப்பட்டுள்ளது.
English Summary
near cuddlaore tasmac shops closed