சென்னை : தொழில்வரி செலுத்தாத 90 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்.!
near chennai ninety shops sealing for not pay income tax
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மாநகராட்சிக்கு, நிகழ் நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வரை, தொழில்வரி பாக்கி செலுத்தாமல் இருப்பவர்கள் பட்டியல் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் அண்ணாசாலை அருகே உள்ள ரிச்சி தெருவில் நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 90 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அதேபோன்று, பாரிமுனையில் நயினியப்பன் தெருவில் உள்ள முப்பது கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிகளிடம் கேட்ட போது, நீண்ட காலமாக வரி செலுத்தாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தெரிவித்ததாவது, "தொழில் வரி செலுத்தாமலும், தொழில் உரிமம் பெறாமலும் கடைகளை நடத்தி வந்த காரணத்தினால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவின்படி தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி இல்லாமல் நடத்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
English Summary
near chennai ninety shops sealing for not pay income tax