வீடியோ: அப்பவே நிதீஷும், சந்திரபாபுவும் செய்த சம்பவங்கள்! மோடியை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுவார்களா?!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரு நன்மை கிடைக்கவில்லை. 350 தொகுதிக்கு மேல் வென்று தனிப்பெண் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த பாஜகவிற்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் தேவை என்ற நிலையில் கூட்டணி கட்சிகளின் தயவுடனே ஆட்சியை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பாஜக ஆளாகியுள்ளது. வருகின்ற 9ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கூட்டணி கட்சி முக்கிய தலைவலான சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமாரும் ஆதரவளித்துள்ளனர். 

இருந்தபோதிலும் இந்தியா இவர்களுக்காக எங்கள் கூட்டணியின் கதவு எப்போதும் திறந்து இருக்கும் என்று  தெரிவித்து பாஜகவுக்கு இனிமா கொடுத்துள்ளனர்.தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் ஏற்கனவே nda கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தான். வாஜ்பாய் அத்வானிக்கு பிறகு மோடியை பாஜகவின் பிரதம வேட்பாளராக முன்மொழிந்த போது அவருக்கு இணையாக நித்திஷ் குமாரையும் பல அரசியல் தலைவர்கள் முன்னிறுத்தினர். நிதீஷ் குமார் தனது நிலைப்பாட்டில் எப்போதுமே உறுதியாக இருந்ததில்லை. இதற்கு சான்று தற்போது இந்தியா கூட்டணியை தொடங்கிய முக்கிய தலைவர்களின் நிதிஷ்குமாரும் ஒருவர். தனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி தரவில்லை என்ற காரணத்தினால் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். 

மாநிலத்தில் தனது பரம எதிரியான லாலு பிரசாத் கட்சியுடன் பிஜேபிக்கு எதிராக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இது ஒரு புறம் இருக்க சந்திரபாபு நாயுடு எப்படியாவது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வாங்கிவிட வேண்டும் என்று குறிக்கோளில் உறுதியாக இருக்கிறார். இவர் அரசியலில் எப்போதுமே சாணக்கிய தனத்துடன் செயல்படுவதால் இவரை கிங்மேக்கர் என்று அழைப்பார்கள். 

பாஜக தலைமையிலான வாஜ்பாய் ஆட்சி அமைப்பதற்கு அப்போது முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரபாபு நாயுடுதான். இப்போது இவர்கள் இருவரும் அதிக எண்ணிக்கையிலான கேபினட் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் எடுக்க பாஜகவினரோ நாங்கள் நித்திஷும் நாயுடும் இல்லையென்றாலும் ஆட்சி அமைப்பதற்கு பிளான் பி ஒன்றை தயார் செய்து வைத்துள்ளதாக கூறி வருகின்றனர். மேலும் , இதற்கெல்லாம் கவலைப்படுபவர்கள் நாங்கள் அல்ல. 

வெறும் 10 12 சீட்டுகளை வைத்துக்கொண்டே பல மாநிலத்தில் ஆட்சி மாற்றம் செய்தவர்கள் நாங்கள்.  இந்தப் பிரச்சினையை மோடியும் அமித்ஷாவும் லெப்ட் ஆண்டிலேயே டீல் செய்வார்கள் என்று சவால் விட்டு வருகின்றனர் பாஜகவினர். இதனால் பாஜக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த மசோதாவையும் நிறைவேற்ற இயலாது. 

முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் ஆலோசித்த பின்னரே எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது பாஜக. எது எப்படியோ மக்கள் கொடுத்த இந்த தீர்ப்பு பாஜகவுக்கு பாதகமாக இருந்தாலும் நாட்டு மக்களுக்கு நல்லது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NDA Alliance BJP TDP JDU issue


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->