நக்சலைட்டுகள் தாக்குதல்: தமிழக துணை ராணுவ வீரர் பரிதாப பலி!
Naxalites attack Tamil Nadu paramilitary soldier killed
வேலூர், கல்லப்பாடி ஊராட்சியை சேர்ந்தவர் செங்கப்பன். இவரது மகன் தேவன் (வயது 30) இவர் சதீஷ்கர் மாநிலத்தில் துணை ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
தேவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்து மீண்டும் பணிக்கு சென்ற நிலையில் சத்தீஸ்கர் ராய்ப்பூர் பகுதியில் சகவீரர்களுடன் முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அவர்களை சுற்றி வளைத்த நக்சலைட்டுகள் ராணுவ படை வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி வெடிகுண்டுகளை வீசினர்.

இதில் அசாமை சேர்ந்த ஒருவர், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் தேவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இது குறித்து தேவனின் குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் தெரியவந்தது. இந்நிலையில் நக்சலைட்டுகள் தாக்குதலில் மரணமடைந்த தேவனின் உடல் இன்று சொந்த ஊரான கல்லப்பாடி ஊராட்சிக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்ய உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Naxalites attack Tamil Nadu paramilitary soldier killed