திண்டுக்கல்: 17 வயது சிறுமியை ஏர் கன் துப்பாக்கியால் சுட்ட இளைஞன் தற்கொலை முயற்சி! பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே 17 வயது சிறுமியை ஏர் கன் துப்பாக்கியால்  சுட்டு விட்டு, இளைஞர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, 19 வயது இளைஞர் செல்வம் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இவர்கள் காதல் வீட்டுக்கு தெரியாத நிலையில், அவ்வப்போது இருவரும் சந்தித்து தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஐவரும் சந்தித்துக்கொண்டபோது காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செல்வம், சிறுமியை ஏர் கன் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.அக்கம் பக்கத்தினர் சிறுமியை மருதுவானமைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனை தலைமறைவாக நின்று பார்த்துக்கொண்டிருந்த செல்வம், எலி மருந்து சாப்பிட்டு அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

தற்போது இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் மற்றும் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naththam love issue murder suicide


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->