நீட் தேர்வெழுதிய நாமக்கல் மாணவி மாயமான விவகாரம்.. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு மன உளைச்சலால் மாயமானதாக கூறப்பட்ட மாணவி, மாலையும் கழுத்துமாக காதல் திருமணம் செய்து உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் சின்ன அரியகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவரது மகள் ஸ்வேதா (வயது 19). இவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நிலையில், கடந்த வருடம் முதல் முறையாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து, மீண்டும் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி ஸ்வேதா, கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில், தேர்வு எழுதிய பின்னர் மன உளைச்சலோடு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலையில் தீடீரென மாணவி வீட்டில் இருந்து மாயமாக, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய ஸ்வேதாவின் தந்தை நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுவேதா வீட்டிலிருந்து மாயமான நிலையில், நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். தற்போது சுவேதா காதலர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதாக கூறி, தேனி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளார். இந்த தகவல் பெண்ணின் தந்தைக்கு தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

தன் மகளை 19 வருடம் படிக்கவைத்து வளர்த்து, எப்படியாவது அவரை மருத்துவராக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட தந்தையின் கனவில், 2 நாட்களாக மகள் பத்திரமாக வீட்டிற்கு வந்தால் போதும் என நினைக்கவைத்து, தற்போது திருமணம் என்ற பெயரில் அவரது தலையில் பெரிய இடியையே இருக்கிறார் 2 கே டாடு லிட்டில் பிரின்சிஸ்.. பதின்ம வயதில் காதல் செய்து, திருமணம் நடந்து வாழவேண்டிய இளம் வயதில் பிரியாமல் இருந்தால் சரி..

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Rasipuram NEET Exam Girl Student Missing Issue She Love Marriage and Now Theni Police Station


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal