கல்குவாரியில் வெடி வைத்த தந்தை.. சிறுமியிடம் விளையாடிய விதி.. கண்ணீரில் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


சேந்தமங்கலத்தில் குவாரிக்கு தந்தையால் வைக்கப்பட்ட வெடியால், மகள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் குண்ணப்பநாயக்கம்பட்டி பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. 

இந்த கல் குவாரியில் மூர்த்தி என்பவர் பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கும் பணியினை செய்து வந்துள்ளார். கல்குவாரி பகுதியில் இருந்து மூர்த்தியின் இல்லம் 1 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் நிலையில், நேற்று மாலை நேரத்தில் வழக்கம்போல குவாரியில் வெடி வைத்துள்ளார். 

இந்த நேரத்தில், வெடித்து சிதறிய பாறை துண்டு ஒன்று, சுமார் 1 கிமீ தூரத்திற்கு பறந்து வந்து, வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த மூர்த்தியின் 5 வயது மகன் மற்றும் 10 வயது மகளின் தலையில் பட்டுள்ளது. இதில் நிலைகுலைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய், இது குறித்து மூர்த்திக்கு தெரிவிக்கவே, இருவரையும் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்துள்ளனர். சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்த மருத்துவர்கள், சிறுவனிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal girl died when tragedy father explodes rock


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->