மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு..! கொலையா? போலீசார் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மாயமான வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் மாயிருளம்பட்டி பகுதியை சேர்ந்தர் பொன்ராஜ்(41). இவரது மனைவி பால்பாண்டியம்மாள். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 29ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பொன்ராஜ், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பொன்ராஜை, உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கிணற்றில் பொன்ராஜ் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பொன்ராஜ் கிணற்றில் உயிரிழந்து நடந்தது எப்படி? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious young man recovered as a dead body in a well in virudhunagar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->