நகை வாங்குவது போல் நடித்து ரூ.5 லட்சம் நெக்லஸ்ஸை திருடி சென்ற மர்மநபர்! - Seithipunal
Seithipunal


கோவையில் நகை வாங்குவது போல் நடித்து ரூ.5 லட்சம் நெக்லஸ்ஸை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ராஜவீதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டுக்கு சாப்பிட சென்றுள்ளார். விஷ்ணு அவருடைய தந்தை அந்த நகை கடையை கவனித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது பிற்பகல் 2 மணி அளவில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் அந்த நகை கடையில் இருந்த ஊழியர்களிடம் நெக்லஸ் வாங்க வேண்டும் அதற்காக மாடலை காட்டுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஊழியர்கள் நெக்லஸ் வகைகளை அவர்கள் காட்டிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த நபர் நகையை எடுக்க தனது உறவினர்கள் வருவதாக கூறினார். தற்போது அவர் வரவில்லை எனவே நாளை வந்து வாங்கிக் கொள்வதாக நகை கடையை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஊழியர்கள் அதை நபருக்கு காட்டிய நகைகளை சரி பார்க்கும்போது 10 பவுன் எடை கொண்ட நெக்லஸ் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் நகை வாங்குவது போல் நடித்து 10 சவரன் அவை நெக்லஸ் நகையை திருடி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

அந்த  நகையின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறை வழக்கு பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mysterious person stole a necklace worth Rs 5 lakh by pretending to buy jewellery


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->