ஊராட்சி தலைவர் பதவிக்காக அடித்துக்கொலை செய்த கொடூரம்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தைக் கூட்டிய அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு, ஊர் மக்கள் அனைவரையும் அழைக்காமல் அவரது ஆதரவாளர்களை மட்டும் அழைத்துக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். 

இதை தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால், சதீஷ்குமாருக்கும் ராமசுப்புவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அந்த சண்டையில், ராமசுப்பு சதீஷ்குமாரைத் தலையில் பலமாகத் தங்கியிருக்கிறார். பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கேயே மயங்கி விழுந்த சதீஷ்குமாரைப் பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இதை தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார், ராமசுப்பு உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder for posting in election


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal