டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவராக முன்னாள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Muniyappan announced as interim chairman of TNPSC
டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி . தலைவராக இருந்த க.பாலச்சந்திரன், வயது அடிப்படையில் கடந்த 9-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். அதனைத்தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி .) பொறுப்பு தலைவராக, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வாணைய உறுப்பினராக முனியநாதன் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது பொறுப்பு தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சி.முனியநாதன் 2010 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். நாகை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Muniyappan announced as interim chairman of TNPSC