அடுத்த சிக்கலில் சூர்யா.. ஒட்டுமொத்தமாக சூர்யாவுக்கு எதிராக திரும்பிய கிராமம்.!! - Seithipunal
Seithipunal


ஜெய்பீம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற அளவிற்கு சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் வரும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும், அவருடைய வீட்டிலிருக்கும் அக்னி கலச காலண்டரும் சர்ச்சையை ஏற்படுத்த முதல் காரணம். இதையடுத்து, சூர்யாவும், ஜோதிகாவும் மன்னிப்பு கோரவேண்டும். நஷ்ட ஈடு 5 கோடி வழங்க வேண்டுமென வன்னியர் சங்கம் சூர்யாவிற்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே, ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான அனைத்து சர்ச்சைக்கும் நான் மட்டுமே பொறுப்பு. எந்த ஒரு சமூகத்தையும், யாரையும் தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் எனக்கு இல்லை என்று அந்த திரைப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் முதனை கிராமத்திலுள்ள மக்கள் திடீரென நடிகர் சூர்யாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியர்கள் குறித்து தவறாக காட்சிப்படுத்தி இருப்பதால் சூர்யாமன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்ற கோஷங்களுடன் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர் கிராம மக்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mudanai people protest against suriya


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->