எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகர் கோபிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை.!!
Ms dhoni huge fan thittakudi Gopi Krishnan suicide
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் தீவிர ரசிகரான இவர் தனது வீட்டின் நிறத்தை சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர்.

தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து கவனம் ஈர்த்தவர் கோபிகிருஷ்ணனை நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோபிகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Ms dhoni huge fan thittakudi Gopi Krishnan suicide