அனல் பறக்கும் தேர்தல் களம் - ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து தான் - கனிமொழி.! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலையொட்டி, திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:- ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மக்கள் களம் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்திருக்கிறோம்.

அந்தந்த கிராமங்களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். மேலும், மகளிர் கடன் தொகை வழங்குதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். பாஜகவும், அதிமுக இரு கட்சியும் திமுக அரசின் திட்டங்களை தங்களுடைய திட்டங்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. 

பாஜக பெரிய ஸ்டிக்கர் கட்சி, அதிமுக சிறிய ஸ்டிக்கர் கட்சி, இந்த 2 ஸ்டிக்கர் கட்சிகளும் தேர்தல் முடிந்த பின்பு ஒட்டிக் கொள்ளும். இப்படி திமுகவின் திட்டங்களை தங்களது திட்டங்கள் என்று கூறுவதற்குப் பதிலாக மக்களுக்கு திட்டங்களைக் கொண்டு வந்து வாக்கு கேளுங்கள் அல்லது எதுவும் செய்யவில்லை மன்னியுங்கள் என்று கூறிவிட்டு வாக்கு கேளுங்கள். 

மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் வழங்குவதில்லை. மாறாக ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகளை மட்டும் வாங்கிக் கொள்கிறது. பாஜக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கேஸ் விலை 500 ஆக குறைக்கப்படும் பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்படும்.

நீட் தேர்வு தொடர்பாக திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறது வழக்கில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்து முதல் கையெழுத்துப் போடப்படும். மேலும் கல்விக்கடன் விவசாயக் கடன் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimzohi speech election campaighn in thoothukudi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->