கடலூரில் சோகம் - 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை..! 
                                    
                                    
                                   mother sucide with childrens in cuddalore
 
                                 
                               
                                
                                      
                                            கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே மாளிகைபுர மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன். எலக்ட்ரிசியனான இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த நித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தம்பதியினருக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் படி நேற்று காலையிலும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

இதனால், அதிருப்தியடைந்த நித்யா தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பொதுகிணற்றில் குதித்துள்ளார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 
அதன் படி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       mother sucide with childrens in cuddalore