கணவன் உயிரோடு இருக்க, இரண்டாவது மனம் வேண்டி மகளுக்கு தந்தை செய்த பெரும் கொடூரம்.. அரங்கேறிய கொடூர சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி மேலத்தெரு பகுதியை சார்ந்தவர் அக்பர் அலி (வயது 48). இவரது மனைவி மதினா பீவி. இவர்கள் இருவருக்கும் பைரோஸ் பானு (வயது 28) என்ற மகள் உள்ளார். பானு கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பகுதியை சார்ந்த கணேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் இரண்டு வயதுடைய மகாலட்சுமி என்ற பென் குழந்தையும், கமர் நிஷா என்ற ஒன்றரை மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில், பானு பாபநாசம் பகுதியில் உள்ள திருப்பாலைத்துறை தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக கணேசன் தனது பெற்றோரை பார்க்க மயிலாடுதுறைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தை கமர்நிஷா இறந்துவிட்டது என்று பானு கணேசனிடம் தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் மனைவியிடம் கேட்ட சமயத்தில் அவர் சரிவர பதில் தெரிவிக்காததால், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விசாரணையில், திருபுவனம் பகுதியை சார்ந்த முகமது தல்கா என்ற நபருக்கு பானுவை மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று அக்பர் அலி முடிவு செய்துள்ள நிலையில், இந்த திருமணத்திற்கு இடையூறாக இருந்த பெண் குழந்தையை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன்படி பானுவின் தந்தை அக்பர் அலி, தாய் மதீனாபீவி மற்றும் பானு, அக்பரின் நண்பர் முகமது ஆகியோரும் சேர்ந்து குழந்தையை துணியால் அமுக்கி கொலை செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mom and his family killed child baby in thirunelveli


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->