கொடியேற்றத்திற்கு தாமதமாக வந்த எம்எல்ஏ கடுப்பான மாணவர்கள்!! - Seithipunal
Seithipunal


பொதுவாக குடியரசு மற்றும் சுதந்திர தினம் என்றால், காலை 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடப்பது வழக்கம். இதனால், இந்தியா முழுவதும் உள்ள  பள்ளிகள், கல்லூரிகள் , அரசு அலுவலகங்கள் என அனைத்திலும் இந்த வழக்கம் தான் நடைமுறையில் உள்ளது.

இன்று இந்தியா முழுவதும்  70 வது  குடியரசு தினம் கோலாகலமாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தலைமை செயலக அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்,மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  

இந்நிலையில், இன்று மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் வருகைக்காக காலை எட்டு மணி முதல் மாணவர்கள் காத்திருந்துள்ளார். 

மேலும், தயார் நிலையில் வைக்கப்பட்டு எட்டு மணியிலிருந்து 3 மணிநேரம் காத்திருந்த தேசியக்கொடியும் இன்று காலை பதினோரு மணிக்கு மொடக்குறிச்சி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியத்தால் ஏற்றப்பட்டது.

இது பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் எரிச்சலை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறு, ஒழுங்கற்ற நிலையில் தான் அதிமுக நிர்வாகமும், ஆட்சியையும் உள்ளது என மக்கள் புலம்பியவாறு உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

modakurichi MLA late visit for republic day function


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->