#BREAKING:: தேர்தல் ஆணையர்கள் தேர்வு... உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்..!!
MKStalin welcomes SC verdict regarding election commissioner appointment
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவின் பரிந்துரையில் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

இந்திய தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை பல அரசியல் கட்சிகள் வரவேற்று உள்ளன.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "தேர்தல் ஆணையர் நியமனத்தில் சரியான நேரத்தில் உச்ச நதிமன்றம் தலையிட்டுள்ளது.
தன்னாட்சி அமைப்புகள் கொள்ளையடிக்கப்படும் போது உச்ச நீதிமன்றம் இந்த சரியான நேரத்தில் தலையீடு என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை பாதுகாக்க முக்கியமானது. அதன் வெளிப்படையான செயல்பாடு ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது" என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
MKStalin welcomes SC verdict regarding election commissioner appointment