தொடர்ந்து உயரும் விலைவாசி.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு.!! சாட்டை சுழற்றும் மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உழவர் சந்தைகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண் துறை அமைச்சர், கூட்டுறவுத் துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் செயலாளர்களுடன் முதல் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும் தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளை துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் 100 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த உளுத்தம்பருப்பு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. உழவர் சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து நேரடி விற்பனை, விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களுக்கு பேருந்து கட்டணத்தில் தளர்வு, உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். 

விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க ரோந்து பணிகளை அதிகப்படுத்துவது, மக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களை அறிவிப்பது குறித்துஅமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின் "நியாய விலை கடைகள், அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் பருப்பு வகைகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் நுகர்ப்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யலாம். அதே போன்று அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கொடுமைப் பொருள் காவல் துறையினர் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை அதிகப்படுத்த வேண்டும். காய்கறி விலை உயர்ந்தாலும் அதன் பலன் நேரடியாக விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. இதனை சரி செய்ய உழவர் சந்தை செயல்பாடு பெரிதும் உதவும். எனவே வேளாண்துறை இதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் செயல்படுத்தப்பட்டது போன்று இல்லம் தேடி காய்கறிகள் விற்பனையை மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை மூலம் தொடங்கலாம். அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறையில் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin orders authorities to curb price hike


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->